Sunday, 6 November 2011

தேசியக் கொடியை அவமதித்தார் ஹஸாரே- டெல்லி கோர்ட்டில் வக்கீல் வழக்கு


டெல்லி: தேசியக் கொடியை அவமதித்து விட்டதாக அன்னா ஹஸாரே மற்றும் அவரது குழுவினர் மீது டெல்லி வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக ரவீந்தர் குமார் என்ற அந்த வக்கீல் டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில்,
Anna Hazare
ஆகஸ்ட் மாதம் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்காக திகார் சிறையில் இருந்து ராம்லீலா மைதானத்துக்கு அன்னா ஹஸாரே, கிரண்பெடி, கெஜ்ரிவால் உள்ளிட்டோர் சென்றனர். அவர்கள் சென்ற வாகனம் முழுவதும் தேசிய கொடியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அரசியல் சட்டப்படி தேசியக் கொடியை வாகனங்களில் கட்டிக் கொண்டு மட்டுமே செல்லலாம். இது தவிர, உண்ணாவிரதம் நடந்த இடத்தில் தேசிய கொடி கிழிக்கப்பட்டு கிடந்தது. பலர், அதன் மீது அமர்ந்தனர். வியர்வையை துடைத்தனர். எனவே, அன்னா ஹஸாரே உள்ளிட்டோர் மீது தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விளக்கம் தர உத்தரவிட்டு டெல்லி காவல்துறை, மாநில அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை நவம்பர்25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment