சென்னை: பெட்ரோல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டதால், தமிழகம் முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து தினமும் 400-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் பெட்ரோல், டீசல் மற்றும் எரிப்பொருட்களை தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுப்பட்டுள்ளன.
இந்த டேங்கர் லாரிகள் 6,000 கிலோ மீட்டர் தூரம் வரை எரி பொருட்களை எடுத்துச் செல்ல இந்தியன் ஆயில் நிறுவனம் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 6,000 என்பதை மூவாயிரம் கிலோ மீட்டராக குறைத்தும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் எரிப்பொருட்களை திருச்சியில் இருந்து அனுப்பவும் ஏற்பாடு செய்து வருகிறது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவால் பாதிக்கப்பட்ட டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் மாலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
"இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் எடுத்துள்ள திடீர் முடிவால் டேங்கர் லாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய முடிவினை நிர்வாகம் கைவிட்டு முன்பு இருந்த முறைப்படி 6 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பெட்ரோல் மற்றும் எரிப்பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். அது வரையில் எங்களுடைய போராட்டம் தொடரும்," என்று அறிவித்துள்ளனர்.
டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தால் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
எனவே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் டேங்கர் லாரிகள் உரிமையாளர்களிடம் இன்று பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

No comments:
Post a Comment